பெரம்பலூரில் 100-க்கும் மேற்பட்ட டைனோசர்கள் முட்டைகள்!
பெரம்பலூர் ,அரியலூர் மாவட்டங்கள் பல கோடி ஆண்டுகளுக்கு முன்னர் கடல் பகுதியாக இருந்ததற்கான ஆதாரமாக பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் வட்டத்தில், சாத்தனூர் கிராமத்தில் கல்மரம் கண்டுபிடிக்கப்பட்டு அங்கு தொல்லியல் துறையினர் சார்பில் அருங்காட்சியகம் அமைக்கப்பட்டு பாதுகாக்கப்பட்டு வருகின்றது.
இந்நிலையில், பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அரசு பள்ளிக்கு அருகேயுள்ள ஏரியில் குடிமராமத்து பணிகள் நடைபெற்று வருகிறது. ஏரியில் மண் எடுக்க தோண்டிய போது, உள்ளே புதைந்திருந்த டைனோசர் முட்டை மற்றும் கடல்வாழ் உயிரின படிமங்கள் வெளிப்பட்டது.
பல்வேறு அளவுகளில் டைனோசர் முட்டைகளை போன்ற உருவங்களில் ஏராளமாக முட்டைகள் கிடைத்துள்ளன. இவைகள் டைனோசர் முட்டைகளின் படிமங்கள் என்றும், பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த நத்தை, ஆமை, கல்மரத்துண்டுகள், நட்சத்திர மீன் போன்ற கடல் வாழ் உயிரினங்களின் படிமங்கள் எனவும் கூறப்படுகிறது.
Comments are closed.