விஜய்யின் ‘ஜனநாயகன்’ Satellite உரிமையை கைப்பற்றியது யார்? கோடிகளில் நடந்த டீல் வெளியானது!
இலைய தளபதி விஜய்யின் கடைசி படமாக உருவாகியுள்ள ‘ஜனநாயகன்’ குறித்து ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. இந்த படத்தின் பெயரே ரசிகர்களுக்கு ஒரு பக்கம் மகிழ்ச்சியையும், மறுபக்கம் சங்கடத்தையும் தருகிறது. காரணம் – ‘ஜனநாயகன்’ படத்துக்குப் பிறகு இனி விஜய் நடிக்கப்போவதில்லை என்ற தகவல்.
2026 ஜனவரி மாதம் பொங்கல் காலத்தில் வெளியாக இருப்பதால், ரசிகர்கள் பெரும் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர். இதுவரை எந்த விஜய் படத்துக்கும் நடக்காத அளவிற்கு, ஜனநாயகன் இசை வெளியீட்டு விழா பிரம்மாண்டமாக நடைபெற உள்ளது.
டிசம்பர் 27 அன்று மலேசியாவின் புகித் ஜலீல் அரங்கில் நடைபெறும் இந்த இசை வெளியீடு விழாவை 85,000 பேர் நேரடியாக அமர்ந்து பார்க்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ரசிகர்கள் ஏற்கனவே டிக்கெட்டுகளைக் கைப்பற்றிக் கொண்டிருக்கின்றனர்.
விஜய்யின் படங்கள் இயல்பாகவே பெரிய அளவில் வியாபாரம் சம்பாதிக்கும். அதிலும் கடைசி படம் என்பதால், ஜனநாயகன் படத்திற்கு ப்ரீ-ரிலீஸ் வியாபாரம் 325 கோடியை கடந்துள்ளது. மொத்த பட்ஜெட் ரூ. 400 கோடி எனக் கூறப்படும் நிலையில், ரிலீஸுக்கு முன்பே 81% வருவாய் திரும்பியதாக தகவல் வருகிறது.
இதற்கிடையில், தற்போது ரசிகர்கள் மத்தியில் பேசுபொருளாக இருப்பது — இந்த படத்தின் Satellite உரிமையை யார் வாங்கியுள்ளனர்?
தகவல்களின்படி,
– ஜீ தமிழ் தான் ஜனநாயகன் படத்தின் சாட்டிலைட் உரிமையை கைப்பற்றியுள்ளது.
– இதற்காக ரூ. 50 முதல் ரூ. 60 கோடி வரை பெரிய அளவில் வியாபாரம் நடந்துள்ளதாக கூறப்படுகிறது.
இது விஜய்யின் கடைசி படமாக இருப்பதால், ஒவ்வொரு உரிமையும் சாதனை விலையில் விற்கப்படுவது ஆச்சரியமல்ல என தொழில்நுட்ப வட்டாரங்கள் கூறுகின்றன.
