தளபதி 65 விஜய்யுடன் ஜோடி சேரும் த்ரிஷா மற்றும் பூஜா ஹெஜிதே!
தளபதி விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் தனது மாஸ்டர் படப்பிடிப்பில் இருக்கிறார். மாஸ்டர் படத்திற்கு பிறகு விஜய் யாருடன் கூட்டணி அமைக்க போகிறார் என்ற கேள்வி தற்போது மிக வைரலாக சமூக வலைத்தளங்களில் போய் கொண்டு இருக்கிறது.
இந்நிலையில் இயக்குனர் சுதா கொங்கரா அவர்கள் இயக்க சன் பிச்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க போவதாக சில தகவல்கள் வெளியாகி இருந்தது.
இந்நிலையில், தளபதி 65 படத்திற்காக விஜய் 12 ஆண்டுகளுக்குப் பிறகு த்ரிஷாவுடன் கைகோர்க்கக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது மற்றும் டோலிவுட் நடிகையான பூஜா ஹெஜிதே விஜய்க்கு ஜோடியாக நடிக்க போகிறார் என்று சில தகவல்கள் கசிந்துள்ளது.
இந்த ஜோடி ஏற்கனவே கில்லி (2004), திருப்பாச்சி (2005), ஆதி (2006) மற்றும் குருவி (2008) போன்ற 4 திரைப்படங்களுக்கு இணைந்து பணியாற்றியுள்ளது. அவர்களின் கெமிஸ்ட்ரி ரசிகர்களால் மிகவும் பாராட்டப்பட்டது.
தளபதி 65 மாஸ்டர் மடக்கிய படம் முடிவடைந்த பிறகு அறிவிப்பு வெளிவரும் என்று தகவல் வெளியாகியுள்ளது.
Comments are closed.