அஜித் ரூ.1.25 கோடி நிதி!

கொரோனா பாதிப்பிலிருந்து மக்களை காக்கும் விதமாக மத்திய, மாநில அரசுகளுக்கு தலா ரூ.50 லட்சம் நிதியும், பெப்சி தொழிலாளர்களுக்கு ரூ.25 லட்சம் என மொத்தமாக ரூ.1.25 கோடி நிதி உதவி வழங்கி உள்ளார் நடிகர் அஜித்.

கொரோனா வைரஸ் தொற்று உலகம் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. அதனை கட்டுப்படுத்த உலக நாடுகள் கடும் நடவடிக்கைகளில் இறங்கியுள்ளன.

திரைப்பிரபலங்களில் அக்ஷ்ய் குமார் 25 கோடி வழங்கி உள்ளார். பிரபாஸ் ரூ.4 கோடி, சிரஞ்சீவி, மகேஷ்பாபு தலா ரூ.1 கோடி, பவன் கல்யாண் ரூ.2 கோடி உள்ளிட்ட பல திரையுலக பிரபலங்களும் மத்திய, மாநில அரசுகளுக்கு நிதி உதவி அளித்துள்ளனர்.

இந்நிலையில், அரசுக்கு பொதுமக்கள், தொழிலதிபர்கள், சினிமா துறையினர் உதவி வருகின்றனர்.

அத ஒரு பகுதியாக நடிகர் அஜீத் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக பிரதமரின் நிவாரண நிதிக்கு ரூ.50 லட்சம், முதல்வரின் நிவாரண நிதிக்கு ரூ.50 லட்சம் வழங்கியுள்ளார். மேலும், சினிமா தொழிலாளர்களின் நலனுக்காக ஃபெப்சி அமைப்புக்கு ரூ. 25 லட்சம் நன்கொடையாக நடிகர் அஜித் வழங்கினார்.

மக்கள் மத்தியில் தன்னை பெரிய ஹீரோவாக காட்டிக் கொள்பவரும், எதிர்காலத்தில் பெரிய அரசியல் கனவோடு இருப்பவருமான விஜய், எப்போது உதவ போகிறார் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.



Comments are closed.

https://newstamil.in/