குட்கா கடத்தல்காரர்களை பிடிக்க ஓடும் காரின் மேல் சுமார் 40 கி.மீ பயணித்த காவலர்!கோவை விளாங்குறிச்சியில் வாகன சோதனையின்போது, கர்நாடகா பதிவு எண் கொண்ட காரை போலீசார் சோதனை செய்ய முயன்றுள்ளனர். அப்போது காரில் இருந்த 3 பேர் போலீசாரை தள்ளிவிட்டு காரில் தப்பிச் சென்றதாக கூறப்படுகிறது.
இதையடுத்து, தலைமை காவலர் ஒருவர் அந்த காரின் மேல் பாய்ந்து படுத்துள்ளார். காரை நிறுத்தாமல் விளாங்குறிச்சி முதல் காளப்பட்டி, நீலாம்பூர், கணியூர், கருமத்தம்பட்டி, தெக்கலூர் வழியாக சுமார் 40 கி.மீ தூரம் சென்றதாக கூறப்படுகிறது.
தொடர்ந்து அவிநாசி பகுதியில் போலீசார் அந்த காரை சுற்றிவளைத்து பிடித்தனர். காரை சோதனை செய்தபோது, தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் இருந்தது தெரியவந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
விசாரணையில், பிடிபட்டவர்கள் ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்றும், பெங்களூருவில் இருந்து குட்கா பொருட்களை கொண்டு வந்து கோவை பகுதிகளில் விற்பனை செய்து வந்ததாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவத்தின் முழு விவரங்களையும் வீடியோவில் பார்க்கலாம்.