அரசியல் எதிர்காலம் வேண்டுமென்றால் அதிமுகவிலிருந்து வெளியேறுங்கள்!

ஒரு காலத்தில் தமிழக அரசியலில் மிகப்பெரிய சக்தியாக விளங்கிய அதிமுக, இன்று தனது தலைவர்கள், எம்.எல்.ஏ.க்கள், நிர்வாகிகள், தொண்டர்கள் என பலரை தொடர்ந்து இழந்து வருகிறது. அதிலும் ஆச்சரியப்பட வைப்பது என்னவென்றால், இந்த நிலை குறித்து கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி எந்தவித கவலையோ, பதற்றமோ காட்டாதது.

கட்சியில் இருந்து ஒருவர் பின் ஒருவராக வெளியேறிக் கொண்டிருக்கும்போதும், அவர்களை தக்கவைக்க எந்த முயற்சியும் மேற்கொள்ளப்படவில்லை என்ற விமர்சனம் தொடர்ந்து எழுந்து வருகிறது. எடப்பாடி பழனிசாமியின் அணுகுமுறையை கவனித்தால், கட்சியின் தற்போதைய நிலை குறித்து அவர் பெரிதாக அக்கறை காட்டுவதாகத் தெரியவில்லை என்று பலரும் கூறுகின்றனர்.

அவருக்கு நெருக்கமான தொழிலதிபர் ஒருவர், “இப்படி தொடர்ந்து நிர்வாகிகள் கட்சியை விட்டு வெளியேறுகிறார்களே… இதைத் தடுக்க ஏதாவது நடவடிக்கை எடுக்க வேண்டாமா?” என்று கேட்டபோது, “போகிறவர்கள் போகட்டும். என் சொத்துக்களை பாதுகாக்க 8 சதவீத வாக்குகள் இருந்தாலே போதும்” என்று எடப்பாடி பழனிசாமி கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதேபோல், மற்றொருவரிடம், “யார் போனாலும் போகட்டும். வைகோ 20 ஆண்டுகளாக மதிமுகவை நடத்தவில்லையா? இருப்பவர்களை வைத்தே நானும் கட்சியை நடத்திக்கொள்கிறேன்” என்றும் அவர் கூறியதாக பேசப்படுகிறது.

இந்த தகவல்கள் உண்மையெனில், அதிமுகவை மீண்டும் வலுவான கட்சியாக மாற்ற வேண்டும், தேர்தலில் வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்ற எண்ணம் தற்போதைய தலைமையிடம் இருப்பதாகத் தெரியவில்லை என்பதே பலரின் கருத்தாக உள்ளது.

மேலும், வேறு யாரும் தலைமைப் பொறுப்புக்கு வர முடியாத வகையில் முழு அதிகாரத்தையும் தன் வசம் வைத்துக்கொண்டு, கட்சியின் வளர்ச்சியை விட தனது கட்டுப்பாட்டையே முன்னிலைப்படுத்துகிறார் என்ற குற்றச்சாட்டும் எழுகிறது.

எனவே, தங்களது அரசியல் எதிர்காலம் குறித்து சிந்திக்கும் அதிமுக நிர்வாகிகளும், தொண்டர்களும் இனியும் கட்சியில் தொடர்வது சரியான முடிவா என்பதை ஆழமாக பரிசீலிக்க வேண்டிய நேரம் வந்துவிட்டதாக அரசியல் வட்டாரங்களில் கருத்துகள் முன்வைக்கப்படுகின்றன.



Sudhakar

சுதாகர் - தமிழ் செய்தித்தளம் Newstamil.in இணையதளத்தில் திறமையான எழுத்தாளர் மற்றும் எடிட்டர். தமிழ் வாசகர்களுக்காக அரசியல் (Politics), உலகச் செய்திகள் (World), தமிழ்நாடு (Tamil Nadu), தேசிய செய்திகள், நீதிமன்றம் (Court), டெக்னாலஜி, ஆட்டோமொபைல், நடப்பு நிகழ்வுகள் மற்றும் விளையாட்டு போன்ற பிரிவுகளில் ஆழ்ந்த, துல்லியமான மற்றும் விரைவான செய்திகளை எழுதும் திறன் கொண்டவர். கிரிக்கெட் தொடர்பான செய்திகளை சுவாரஸ்யமாகவும், வாசகர்களை ஈர்க்கும் விதமாகவும் வழங்கும் திறமை அவரின் முக்கியமான பலமாகும். தகவல்களை எளிதில் புரியும் வகையில், நேர்மையான அணுகுமுறையுடன் வழங்குவதால் Newstamil.in வாசகர்களிடையே நம்பகமான எழுத்தாளராக திகழ்கிறார்.

https://newstamil.in/