அஜித் வாங்கிய ரூ.9 கோடியிலான ஃபெராரி கார்?
நடிகர் அஜித்குமார் புதிய ஃபெராரி கார் ஒன்றை வாங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அஜித்குமார் தற்போது ‘விடாமுயற்சி’ மற்றும் ‘குட் பேட் அக்லி’ என்கிற இரு படங்களில் நடித்து வருகிறார், மேலும் இந்தப் படங்களின் படப்பிடிப்புகள் வேகமாக நடைபெற்று வருகின்றன.
விடாமுயற்சி படத்திற்கான அஜர்பைஜான் படப்பிடிப்பு சில நாட்களுக்கு முன் முடிந்தது. இந்த படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடைபெறும் என கூறப்படுகிறது.
இந்த நிலையில், அஜர்பைஜானில் படப்பிடிப்பை முடித்த பின், நடிகர் அஜித்குமார் ரூ.9 கோடி மதிப்புள்ள ஃபெராரி கார் ஒன்றை வாங்கியதாக தகவல் வெளியாகியுள்ளது. கார்கள் மீது ஆர்வம் கொண்ட அஜித், ‘விடாமுயற்சி’ படப்பிடிப்பின் ஓய்வு நாள்களில் பந்தயக் கார்களை ஓட்டியது குறிப்பிடத்தக்கது.