Thursday, September 10, 2026
ENTERTAINMENTLatest

விக்னேஷ் சிவன் இயக்கம் ‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’ போஸ்டர்!

இயக்குநர் விக்னேஷ் சிவன் – பிரதீப் ரங்கநாதன் கூட்டணியில் உருவாகும் புதிய படத்தின் முதல் பார்வை போஸ்டர் வெளியீடு. இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடிகர் அஜித் குமார் நடிக்கவிருந்த படம் சில பிரச்னைகளால் கைவிடப்பட்டது. தற்போது, ‘லவ் டுடே’ புகழ் பிரதீப் ரங்கநாதனை வைத்து விக்னேஷ் சிவன் புதிய படத்தை இயக்கி வருகிறார்.

இந்தப் படத்திற்கு “லவ் இன்சூரன்ஸ் கம்பெனி” (எல்ஐகே) என பெயரிட்டுள்ளனர். இப்படத்தில், பிரதீப்புக்கு ஜோடியாக நடிகை கீர்த்தி ஷெட்டி, முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர் எஸ்.ஜே.சூர்யா, மற்றும் பிரதீப்பின் அப்பாவாக நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் நடிக்கின்றனர்.

இந்த நிலையில், “லவ் இன்சூரன்ஸ் கம்பெனி” படத்தின் முதல் பார்வை போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. போஸ்டரில், ‘இதயம் செய்வதை எந்திரம் செய்யாது’ எனக் குறிப்பிட்டுள்ளனர்.