மோடி முதல்வர்களுடன் ஆலோசனை – ஊரடங்கு நீட்டிக்கப்படுமா?
கொரோனா வைரஸ் ஊரடங்கு செவ்வாய்க்கிழமை முடிவடையும் நிலையில் இது குறித்த தனது முடிவை அறிவிக்க பிரதமர் நரேந்திர மோடி மீண்டும் உரையாற்ற வாய்ப்புள்ளது. முடிவுகளை எடுப்பதற்கு முன்அவர் இன்று வீடியோ மூலம் முதல்வர்களை சந்தித்தார்.
கொரோனா தடுப்புக்காக நாடு முழுக்கவும் 21 நாள் ஊரடங்கு வைக்கப்பட்டுள்ளது. இன்று ஊரடங்கு 18வது நாள் ஆகும். வரும் செவ்வாய்க்கிழமை, ஏப்ரல் 14ம் தேதியுடன் ஊரடங்கு நிறைவடைகிறது.
அனைத்து மாநில முதல்வர்களுக்கும் ஒரே மாதிரியான நேரக்கெடு கொடுக்கப்பட்டு, அவர்கள் கருத்தை மோடி கேட்க உள்ளார். சுமார் 3 மணி நேரம் இந்த ஆலோசனை தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
புதன்கிழமை அனைத்து கட்சிகளின் தலைவர்களுடனான ஒரு வீடியோ கூட்டத்தில், பிரதமர் மோடி அனைத்து ஊரடங்கு நீக்குவது “சாத்தியமில்லை” என்று கூறியிருந்தார்.
“அரசாங்கத்தின் முன்னுரிமை ஒவ்வொரு உயிரையும் காப்பாற்றுவதாகும். நாட்டின் நிலைமை ஒரு ‘சமூக அவசரநிலைக்கு’ ஒத்ததாக இருக்கிறது, இது கடுமையான முடிவுகளை அவசியமாக்கியுள்ளது, நாம் தொடர்ந்து விழிப்புடன் இருக்க வேண்டும்,” என்று பிரதமர் கூறினார்.
Comments are closed.