மரணத்தை நோக்கி சிங்கங்கள்; வைரலாகும் படங்கள்
வடக்கு ஆப்பிரிக்க நாடான சூடானில் நிலவும் உணவுப் பற்றாக்குறையால், எலும்பும் தோலுமாகக் காட்சியளிக்கும் சிங்கங்களுக்கு, உடனடியாக உதவக் கோரி, #SudanAnimalRescue என்ற ‘ஹாஸ்டேக்’குடன் சிங்கங்களின் படங்கள் வைரலாகி வருகின்றன.
குரேஷி பூங்கா சூடானின் தலைநகரான கார்டூம் நகராட்சியால் நிர்வகிக்கப்படுகிறது. தனியார் அமைப்புகளின் நிதி மற்றும் நகராட்சியின் நிதி ஆகியவற்றைப் பயன்படுத்தி பூங்கா ஊழியர்கள் விலங்குகளைப் பராமரித்து வருகின்றனர்.
காடுகளின் அரசன் என்றதும், கற்றையான முடி பிடரியில் புரள, கம்பீரத்துடன் நிற்கும் சிங்கத்தின் உருவம் அனைவரது மனத் திரையிலும் விரியும். ‘காட்டு ராஜா’ என்ற பெயருக்கு ஏற்ப, கம்பீரமான தோற்றத்துடன் இருக்கும் சிங்கத்தைப் பார்த்தாலே அனைவரும் அஞ்சுவர்.
ஆனால், சில நாட்களாக, இணையத்தில் உலாவரும் சிங்கங்களின் படங்கள், காண்போரை கலங்கடித்து வருகின்றன. மிகவும் மெலிந்து ஒடுங்கிய உடல், வெளியில் தெரியும் எலும்புகள், உடலை விட்டு உயிர் பிரியும் தறுவாயில், மரணத்தை எதிர்நோக்கி காத்திருக்கும் முகத்துடன் அந்த சிங்கங்கள் இருக்கின்றன.
Comments are closed.