Thursday, September 10, 2026
ENTERTAINMENT

எந்த பந்து போட்டாலும் அடிக்கும் எடப்பாடி பழனிசாமி – அமீர்

ராஜி நிலா முகில் ஃபிலிம் தயாரிப்பில் இயக்குநர் அசோக் தியாகராஜன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘மாயநதி’. இந்தப் படத்தில் நடிகர் அபி சரவணன் அப்புகுட்டி மற்றும் நாயகி வெண்பா ஆகியோர் நடித்து உள்ளனர்.

மாயநதி எனும் திரைப்படத்தின் இசைவெளியீட்டு விழா சென்னை வடபழனியில் உள்ள கமலா திரையரங்கில் நடைபெற்றது.

அதில் கலந்து கொண்டு பேசிய இயக்குனர் அமீர், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி எந்த பால் போட்டாலும் நன்றாக அடிக்கிறார்.

தமிழகத்தில் தான் தமிழ் சினிமா இன்னும் முன்னேறாமல் இருக்கிறது. யாரும் துறை சார்ந்த பிரச்னைகளை முதல்வரிடம் போய் சொன்னதே இல்லை. முதலமைச்சருக்கு நெருக்கமானவர்கள் மட்டுமே அவரவர் தேவையை நிறைவேற்றிக் கொண்டு முன்னேறுகிறார்கள். தவிர துறை சார்ந்த பிரச்னைகளை பற்றியே முதல்வர்களிடம் கொண்டு பேசியதே இல்லை” என்று அவர் கூறியுள்ளார்.

மேலும், இத்தனை நாட்களாக கேள்வி கேட்டு வந்த தான், முதல்முறையாக ஒரு கோரிக்கை விடுப்பதாகக் கூறி, நீண்ட நாட்களாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள தமிழக அரசின் விருதுகளை வழங்க வேண்டும் என்றார்.


Comments are closed.