Thursday, September 10, 2026
LatestNEWS

ஆப்பிள் ஏர்பாட் விழுங்கிய 7 வயது சிறுவன்

கிறிஸ்துமஸ் பரிசாக பெற்றோர் தந்த ஆப்பிள் ஏர்பாட்டை 7 வயது சிறுவன் தற்செயலாக விழுங்கியதால் அமெரிக்காவின் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

ஜார்ஜியாவின் அட்லாண்டாவின் சில்ட்ரன்ஸ் ஹெல்த்கேரில் எடுக்கப்பட்ட ஒரு எக்ஸ்ரே படத்தில் சிறுவனின் வயிற்றுக்குள் ஆப்பிள் ஏர்பாட்ட் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதை பற்றி டாக்டர் கூறுகையில், “சிறுவனின் தாயாரிடம் சிறுவன் ஆப்பிள் ஏர்பாட்ட் விழுங்கியதும் எந்த முயற்சியும் மேற்கொள்ள வேண்டாம் தானாக வந்துவிடும் என்று கூறினேன்” என்றார். இப்போது அந்த சிறுவன் நலமுடன் இருக்கிறான்.



Comments are closed.