Thursday, September 10, 2026
ENTERTAINMENTLatest

அண்ணாச்சி அருள் படத்தில் தமன்னா! சம்பளம் பல கோடி ரூபாய்?

சரவணா ஸ்டார் உரிமையாளர் அருள், விளம்பர படங்களில் இவருக்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து, திரைப்பட நடிகராகவும் மாறியுள்ளார். இவர் நடித்து வரும் படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தான் பூஜையுடன் தொடங்கியது. இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை கீர்த்தி திவாரி நடித்து வருகிறார்.

ஏற்கனவே இந்த திரைப்படம் 100 கோடி பட்ஜெட்டில் உருவாக உள்ளது என கூறப்பட்ட நிலையில், தற்போது ஒரே ஒரு பாடலுக்கு மட்டும் 10 கோடி செலவு செய்து அனைவரையும் மிரட்டியுள்ளாராம் அண்ணாச்சி.

இந்நிலையில் தற்போது இந்த படத்தின் நாயகி தமன்னா தான் என முடிவு செய்துவிட்டதாகவும் இதற்கான ஒப்பந்தம் சமீபத்தில் கையெழுத்திடப்பட்டதாகவும், இந்த படத்திற்காக தமிழ் சினிமாவில் எந்த நடிகையும் இதுவரை பெறாத மிகப்பெரிய தொகையை தமன்னா பெற்றிருப்பதாகவும் கூறப்படுகிறது

மேலும் இந்த படத்தில் தமன்னாவுக்கு அழுத்தமான கேரக்டர் என்றும் அந்த கேரக்டரின் முழு வடிவத்தையும் கேட்ட பின்னர் தமன்னா இந்தப் படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டதாகவும் கூறப்படுகிறது.

பல கோடி செலவு செய்து மாஸ் நடிகர்களின் படங்களுக்கு நிகராக விறு விறு என வளர்ந்து வரும் இப்படம், வசூலிலும் சாதனை படைக்குமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்


Comments are closed.