ரயிலில் மிடில் பெர்த் கழன்று விபத்து; முதியவர் உயிர் தப்பினார்!

விரைவு ரயிலில் மிடில் பெர்த் கழன்று விழுந்ததில் லோயர் பர்த்தில் உறங்கிய 70 வயது முதியவர் காயத்துடன் உயிர் தப்பினார்.

சென்னை தாம்பரத்தில் இருந்து நேற்று (ஜன.,20) இரவு 7:20 மணிக்கு நாகர்கோவிலுக்கு புறப்பட்ட விரைவு ரயிலின் எஸ்10 பெட்டியில் ‘லோயர் பெர்த்தில்’ இருந்தவரின் மீது படுக்கை கழன்று விழுந்த சம்பவம் அரங்கேறியுள்ளது.

நள்ளிரவில் தர்மராஜ் உறங்கிய பெர்த்துக்கு மேல் இருந்த மிடில் பெர்த் திடீரென கழன்று அந்த பெர்த்தும், அதில் உறங்கிய பயணியும் தர்மராஜ் மீது விழுந்தனர்.

சகபயணிகள் தர்மராஜ் உள்ளிட்ட இருவரையும் மீட்டனர். மதுரை ரயில் நிலைய ஊழியர்கள் பெர்த்தை சரிசெய்ய முயன்றதாகவும், அதனை சரி செய்ய இயலவில்லை என்றும் கூறப்படுகிறது.

மேலும், அவர்களுக்கு முதலுதவி அளிக்கப்படவில்லை. இந்த சம்பவத்தால் அரை மணிநேர தாமதத்திற்கு பிறகு ரயில் கிளம்பியது.



Comments are closed.

https://newstamil.in/