Friday, September 18, 2026
ENTERTAINMENT

யாரும் செய்யாத சாதனை – விஜய்யின் மாஸ்டர் படத்தின் குட்டி கதை பாடல்!

லோகேஷ் கனகராஜ் இயக்கும் மாஸ்டர் படம் பற்றி தான் இப்போது அதிக பேச்சு. விஜய் இதில் கல்லூரி மாணவராக நடிப்பதாக ஒரு தகவல்.

மேலும் ஒரு தகவல் விஜய் கல்லூரி பேராசிரியராக நடிக்கிறார் என்றும், நீட் தேர்வு பாதிப்புகளை பற்றிய கதையம்சத்தில் தயாராகிறது என்றும் தகவல் வெளியாகி உள்ளது. இதை படக்குழுவினர் உறுதிப்படுத்தவில்லை.

மேலும் நிறைய கதைகள் கூறப்படுகிறது, ஆனால் இப்போது அதை பற்றி எல்லாம் ஒரு விஷயம் இல்லை. ரசிகர்கள் முழுக்க முழுக்க மாஸ்டர் படத்தின் குட்டி கதை பாடலை டிரண்ட் செய்யும் வேலையில் அதிகம் இறங்கியுள்ளனர்.

விஜய் பாடியுள்ள ‘ஒரு குட்டி கதை’ எனத் தொடங்கும் முதல் பாடல் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது. இப்பாடலை அருண்ராஜா காமராஜ் எழுதியுள்ளார். படத்தை ஏப்ரல் மாதம் திரைக்கு கொண்டு வருகிறார்கள்.

நேற்று மாலை 5 மணியளவில் ரசிகர்கள் கொண்டாடும் வகையில் பாடல் வெளியானது. இதில் விஜய் மிகவும் ஸ்டைலிஷ்ஷாக பாடல் பாட யூடியூபில் டிரண்டிங்கில் உள்ளது.

இதுவரை பாடல் எத்தனை மணி நேரத்தில் எவ்வளவு லைக்ஸ் பெற்றுள்ளது தெரியுமா, இதுவரை 6,485,699 views இந்த வீடியோவை ரசித்து இருக்கிறார்கள், லைக்ஸ் மட்டும் 944K பெற்றுள்ளது. இதுவரை எந்த வீடியோவும் செய்யாத சாதனை.