20 வருடம் கழித்து தல அஜித் பாட்டுக்கு சிம்ரன் ஆடிய டிக்டாக் வீடியோ!

20 வருடங்களுக்கு முன்பு நடனம் ஆடிய வாலி பட பாடலுக்கு, தற்போது அதே வேகத்துடன் நடனம் ஆடி ரசிகர்களை ஆச்சரியப்பட வைத்துள்ளார் சிம்ரன்.

நடிகர் அஜித்தின் ஹிட்டான பாட்டு ஒன்றுக்கு சிம்ரன் டிக் டாக் செய்து வெளியிட்டுள்ள வீடியோ ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

1990களில் ரசிகர்களின் கனவு கன்னியாக வலம் வந்த நடிகை சிம்ரன் மீண்டும் நடிப்பு பக்கம் வந்துள்ளார். பேட்ட படத்தில் சிம்ரனின் நடிப்பு பெரிதாக பேசப்பட்டது. தற்போது உள்ள நடிகைகளுக்கு டப் கொடுக்கும் விதமாக இருக்கிறார் சிம்ரன். அதை நிரூபிக்கும் விதமாக நடிகை சிம்ரன் டிக்டாக் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.



Comments are closed.

https://newstamil.in/