நடிகர் சரத்குமாரின் செல்போன் எண் போலியாக உருவாக்கம்
பிரபலங்கள் போலப் பேசும் சாப்ட்வேரைப் பயன்படுத்தி, நடிகர் சரத்குமார் பேசுவது போலப் பிரபலங்களுக்கு போன் செய்து, தொல்லை கொடுத்து வந்த கோவையைச் சேர்ந்த மென்பொறியாளர் மீது காவல் ஆணையரகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
தனது செல்போன் எண்ணை, போலியாக உருவாக்கி மோசடியில் ஈடுபட முயன்ற மர்மநபர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு சமத்துவ மக்கள் கட்சித் தலைவரும், நடிகருமான சரத்குமார் சென்னை காவல் ஆணையரிடம் புகார் அளித்துள்ளார்.
கடந்த சில நாட்களாக முக்கிய தலைவர்கள் மற்றும் விருந்தினர்கள் பெயரில் தனக்கு தொலைபேசி அழைப்புகள் வந்துள்ளதாக குறிப்பிட்டுள்ள அவர், தனது பெயரில் வி.ஐ.பி.க்கள் பலருக்கும் அழைப்புகள் சென்றுள்ளது. இதுகுறித்து சென்னை காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வாலை சந்தித்த சரத்குமார், புகார் அளித்தார்.
மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரிதத்து வருகின்றனர். போலி எண் மூலம் தனக்கு வந்த அழைப்பின் பதிவு விவரங்களை போலீசாரிடம் சரத்குமார் கொடுத்துள்ளார்.
கோவையைச் சேர்ந்த மென்பொறியாளர் ஒருவர், சாப்ட்வேர் ஒன்றின் உதவியுடன் பிரபலங்களின் குரலைப் போல மற்ற பிரபலங்களுடன் உரையாடி தொல்லை கொடுத்தது தெரிய வந்ததையடுத்து, இது குறித்து சரத்குமார் தரப்பில் சென்னை பெருநகர காவல் ஆணையரிடம் புகார் அளிக்கப்பட்டது.
சரத்குமாரிடம் பேசிய நபர் தனக்கு கோவை என்று குறிப்பிடாலும், அவரது தமிழ் உச்சரிப்பு மலையாளம் கலந்து இருந்ததால் அவர் கேரளாவை சேர்ந்தவராக இருக்கலாம் என்றும் சாப்ட்வேர் தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி பிரபலங்களை போல பேசி, பண மோசடியில் ஏதும் ஈடுபட்டாரா என்பது குறித்து விசாரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
சென்னை: 2021 சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்களின் முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியிடப் பட்டுள்ளது. சட்டசபை தேர்தலில், அ.தி.மு.க.,…
திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சிக்கு 3 இடங்களும், மனிதநேய மக்கள் கட்சிக்கு இரு இடங்களும்…
சென்னை: அரசியலை விட்டு ஒதுங்கி இருந்து ஜெயலலிதா ஆட்சி அமைய தொடர் பிரார்த்தனை செய்ய உள்ளதாக சசிகலா இன்று திடீரென…
தமிழகத்திற்கு இதுவரை மொத்தம் 15 சட்டமன்ற பொதுத்தேர்தல்கள் நடைபெற்று உள்ளன. இந்த ஆண்டு (2021) நடை பெற இருப்பது 16…
கரோனா பாதிப்பு ஏற்பட்டு, சிகிச்சை பெற்று நலமுடன் இருக்கிறேன் என்று நடிகர் சூர்யா தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். நடிகர்…
அ.தி.மு.க.,நிர்வாகிகள் கூட்டம் கட்சி அலுவலகத்தில் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி ஆகியோர் தலைமையில் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்…
This website uses cookies.