Wednesday, September 16, 2026
ENTERTAINMENT

பிச்சைக்காரனாக கிடந்த உதவி இயக்குனர்!

பிச்சைக்காரனாக கிடந்த உதவி இயக்குனர்!

வடபழனி நூறடி சாலையோரம் அம்பிகா எம்பையர் ஹோட்டல் எதிரில் அழுக்கு படிந்த கிழிந்த உடையுடன் பிச்சைக்காரன் போல் சிக்கு பிடித்த தலையோடு கையில் பேப்பர் பேனாவுடன் இருந்தவரை புகைப்படமாக எடுத்து சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளனர்.

அவரை விசாரித்த போது அவர் தன்னுடைய கதைகளை திருவிட்டனர் என கூறியுள்ளனர். மேலும் அவர் கவிதைகள் பல எழுதி வைத்திருந்தாராம்.

மேலும் நடிகை சிம்ரனின் தங்கை மோனல் மற்றும் நடிகர் குணால் நடித்த பார்வை ஒன்றே போதுமே படத்தின் உதவி இயக்குனர் குருநாதன் என்பது தெரியவந்துள்ளது.

பலகாலமாக அவர் வாய்ப்பு தேடி பலமுறை அலைந்த போது எதுவும் கிடைக்காமல் சாப்பிட வழியில்லாமல் பிச்சைக்காரர் போல கிடந்து பலரையும் அதிர்ச்சியாக்கியுள்ளது. இந்நிலையில் அவரின் நண்பர் உடனே குருநாதனை சொந்த ஊரான திருச்சி மணப்பாறைக்கு அழைத்துச்சென்றுள்ளாராம்.