தேசிய விருது - அசுரன், விஸ்வாசம், ஒத்த செருப்பு & சூப்பர் டீலக்ஸ்

தேசிய விருது – அசுரன், விஸ்வாசம், ஒத்த செருப்பு & சூப்பர் டீலக்ஸ்

SHARE THIS

2019 க்கான 67-வது தேசிய திரைப்பட விருதுகள் இந்திய தலைநகர், புது டெல்லியில் திங்கள்கிழமை அறிவிக்கப்பட்டன. இந்த விழாவில் 2019-ஆம் ஆண்டிற்கான திரைப்படங்கள், மற்றும் கலைஞர்களுக்கு விருது அறிவிக்கப்பட்டு வருகின்றன.

  • அசுரன் – தனுஷிற்கு சிறந்த நடிகருக்கான தேசிய விருது
  • சிறந்த இசையமைப்பாளர் (விஸ்வாசம்) – இமானுக்கு தேசிய விருது
  • சிறந்த தமிழ் படமாக- அசுரன் தேர்வு
  • சிறந்த துணை நடிகர்: விஜய் சேதுபதி (சூப்பர் டீலக்ஸ்)
  • ஒத்த செருப்பு படத்திற்கு தேசிய விருது

இதில் அசுரன் திரைப்படம் சிறந்த படமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் நடித்த தனுஷ் சிறந்த நடிகருக்கான தேசிய விருதை வென்றுள்ளார். இயக்குநர் வெற்றிமாறன் இயக்கியிருந்த இந்தப் படம் எழுத்தாளர் பூமணி எழுதியிருந்த ‘வெக்கை’ நாவலை அடிப்படையாகக் கொண்டு இயக்கப்பட்டிருந்தது.

நடிகரும் இயக்குநருமான பார்த்திபன் இயக்கி நடித்திருந்த ‘ஒத்த செருப்பு சைஸ் 7’ படம், சிறப்பு தேசிய விருது (jury award) மற்றும் சிறந்த ஒலிப்பதிவு (ரசூல் பூக்குட்டி) என இரண்டு விருதுகளை வென்றது.

விஸ்வாசம் படத்தில் இடம்பெற்ற ‘கண்ணான கண்ணே’ பாடலுக்காக டி.இமானுக்கு தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

(adsbygoogle = window.adsbygoogle || []).push({}); (adsbygoogle = window.adsbygoogle || []).push({});

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *