கொரோனா தடுப்பு பணிகளுக்கு ரூ.500 கோடி கூடுதல் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார். கொரோனா முன்னெச்சரிக்கை கட்டுப்பாடுகளை மத்திய அரசு விதித்துள்ள நிலையில், இதனை மீறினால் சட்ட ரீதியான நவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், கொரோனா கட்டுப்பாடுகளை மீறுபவர்களுக்கு 6 மாதம் சிறை அல்லது ரூ.1,000 அபராதம் விதிக்க சட்டம் வழி செய்கிறது. தொற்றுநோய் சட்டம் 1897-ன் படி அரசின் விதிகளை மீறுபவர்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்க முடியும்.