Sunday, September 13, 2026
Latest

ஓடும் ரயிலில் எய்ட்ஸ் இருக்கும் பெண்ணை சீரழித்த 2 பேர்

பிகாரில் ஓடும் ரயிலில் எச்ஐவி பாதிக்கப்பட்ட இளம் விதவை பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த வெட்கக்கேடான சம்பவத்தில், 2 பேரை போலீஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பீகார் மாநிலத்தில் உள்ள இடம் கைமூர் இங்கு வசித்து வரும் 22 வயது பெண் எச்ஐவி நோயால் பாதிக்கப்பட்டிருந்தார் இதற்கான சிகிச்சையிலும் அவர் உள்ளார்.

இந்த நிலையில், நள்ளிரவு பாட்னாவில் இருந்து பபுவா செல்லும் இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயிலில் ஊர் திரும்பினார். அவர் பயணம் செய்த பெட்டியில் வேறு யாரும் இல்லை. இதைக் கண்ட 2 இளைஞர்கள் இரவு 11.50 மணியளவில் அவரை பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.

இந்த சமயத்தில் இரவு நேரத்தில் ரோந்து பணியில் இருந்த ரயில்வே போலீசார் இதை பார்த்துவிட்டனர். உடனடியாக அந்த கம்பார்ட்மென்ட்டில் ஏறினர்.. ஆனால் அவரை பார்த்ததும் 2 பேரில் ஒருவர் தப்பி ஓடினார், பின்னாடியே விரட்டி சென்ற போலீசார் அவரை மடக்கி பிடித்தனர்.

பின்னர் இருவரையும் கைது செய்து நடத்திய விசாரணையில், அவர்கள் கைமுர் மாவட்டத்தில் உள்ள சாய்தா பகுதியைச் சேர்ந்த பீரேந்திர பிரகாஷ் சிங் (26), தீபக் சிங் (28) என்பது தெரியவந்தது.

ஓடும் ரயிலில் எய்ட்ஸ் பாதிக்கப்பட்ட இளம் விதவை பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த ஒரு வெட்கக்கேடான சம்பவம் பிகார் மாநில மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.